பசுவை பாரத மாதாவாக அறிவிக்க வேண்டும் – சிவ சேனா எம்.பி.

0

பசுவின் மூலம் நமக்கு கிடைக்கும் பால், சிறுநீர், மற்றும் சாணம் ஆகிய நன்மைகள் விலைமதிப்பற்றவை. அதனால் பசுவை பாரத மாதா என்று அறிவிக்க வேண்டும் என்று சிவா சேனா எம்.பி. மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் பூஜ்ய நேரத்தின் போது சிவ சேனா உறுப்பினர் சந்திரகாந்த் கைரே இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த கோரிக்கை பா.ஜ.கவின் ஆதித்யானத் பகவத் கீதையை தேசிய புத்தகமாக அறிவிக்க வேண்டும் என்று விடுத்ததை தொடர்ந்து நடந்துள்ளது.

மக்களவையில் தன கருத்தை கூறும் போது பசுவின் மூலம் நமக்கு கிடைக்கும் பால், சிறுநீர், மற்றும் சாணம் ஆகியவற்றின் மூலம் விலை மதிக்க முடியாத நன்மைகளை பசு மக்களுக்கு தருகின்றதனால் பசுவை ராஷ்டிர மாதாவாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Comments are closed.