பசு பாதுகாவலர்களுக்கு(?) அடையாள அட்டை வழங்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்

0

மகாராஷ்டிர மாநில விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க முடிவெடுத்துள்ளனர். மகாராஷ்டிராவில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வாகனங்களை சட்ட விரோதமாக நிறுத்தி சோதனையிட்டவர்களை பொதுமக்கள் தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விஹச்பி யின் அஜெய் நில்தவார் கூறுகையில், “பசு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தன்னார்வ தொண்டர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இன்னும் இவர்களின் பட்டியல் மாநில அரசிற்கும் வழங்கப்படும்.” என்று அவர் கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பசு பாதுகாப்பு என்கிற பெயரில் நடக்கும் வன்முறை குறித்து பத்திரிகாயளர்கள் கேள்வி எழுப்பியதற்கு இவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்த முடிவு விஹச்பி தலைவர்கள் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பங்கெடுத்த மூன்று சந்திப்புகளுக்கு பின்னர் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். இந்த முடிவு சமூக விரோத கும்பலிடம் இருந்து பசு பாதுகாவலர்களை பிரித்தறிய உதவும் என்று விஹச்பி தரப்பில் கூறப்பட்டாலும் சமீபத்தில் மகாராஷ்டிராவில் பசு பாதுகாவல் குண்டர்களை பொதுமக்கள் தாக்கியதால் இனி இது போன்று நடைபெறுவதை விட்டு அவர்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட முடிவு என்று சந்தேகிக்கப்படுகிறது.

Comments are closed.