பஜ்ரங்தள் ஆயுத பயிற்சி வீடியோ: அயோத்யா பஜ்ரங்தள் தலைவர் கைது

0

உத்திர பிரத்ச மாநிலம் அயோத்தியாவில் பஜ்ரங்தள் அமைப்பினர் தர்காப்ப் ன்று கூறிக்கொண்டு மற்கொண்ட ஆயுத பயிற்சியின் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாஇ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இந்த பயிற்சி தொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டு இரு சமூகத்திற்கு இடையே வெறுப்பை தூண்டுதல் என்கிற பிரிவில் வழக்கும் பதிவு செய்யபப்ட்டது. இதனையடுத்து அயோத்தியாவின் பஜ்ரங்தள் தலைவர் மகேஷ் மிஸ்ரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட இந்த வீடியோவில் தலையில் தொப்பி அணிந்த நபர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு அவர்களை தோற்கடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் அடிப்படையிலேயே இரு பிரிவினர்களுக்கு இடையே வெறுப்பை தூண்டுதல் என்கிற பிரிவில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட புகாரில் 50 நபர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்று மூத்த காவல்துறை அதிகாரி மோஹித் குப்தா தெரவித்துள்ளார்.

இது குறித்து பாஜக தலைவர் ஷானவாஸ் ஹுசைன் கருத்து தெரிவிக்கையில், “தீவிரவாதிளுடன் சண்டையிட நம் பாதுகாப்பு படையினர் போதுமானவர்கள். நரேந்திர மோடியின் ஆட்சியையும் நமக்கு இருக்கின்றது. இது குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை.” என்று கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ரவி ஆனந்த், நாங்கள் நம் பெண்களை பாதுகாத்து அவர்களுக்கு உதவ இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கின்றோம். பின சமூகத்தினர் இதனை செய்ய நாங்கள் வரவேற்க்கின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.

உத்திர பிரதேசத்தின் ஆளுநர் ராம் நாயக், இந்த பயிற்சி முகாம் சரியானது என்றும் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்கள் நாட்டை பாதுகாக்க முடியாதவர்கள் அதனால் இளைஞர்கள் தற்காப்புக்கு என்று ஆயுத பயிற்ச்சியில் ஈடுபடுவதில் தவறொன்றும் இல்லை என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்தை விமர்சித்த பிருந்தா கரத், இவர்தான் அரசியல் சாசனத்தை நிலைநாட்டுபவர் என்று கூறியுள்ளார்.

Comments are closed.