படுகொலைகளை நிறுத்தாத சண்டை நிறுத்தம்

0

படுகொலைகளை நிறுத்தாத சண்டை நிறுத்தம்

கஷ்மீரில் புனித ரமலான் மாதத்தில் மத்திய அரசாங்கம் தன்னிச்சையான சண்டை நிறுத்தத்தை அறிவித்த போதும் கஷ்மீர் பள்ளத்தாக்கில் படுகொலைகள் தடையின்றி நடந்தேறின. எல்லைக்கு அப்பால் இருந்து தொடுக்கப்பட்ட தாக்குதல்களை தவிர்த்து கையெறி குண்டு தாக்குதல்களும் மாதத்தின் இறுதியில் தெற்கு கஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் போராளிகள் மற்றும் இராணுவத்தினர் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூடு உள்ளிட்ட சம்பவங்களும் இடம்பெற்றன.

ஜூன் 1 அன்று வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீநகரின் ஜாமிஆ மஸ்ஜித்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு நடைபெற்ற போராட்டத்தில் கைஸர் பட் மற்றும் மற்றொரு நபர் மீது சி.ஆர்.பி.எஃப்.யின் வாகனம் ஏற்றப்பட்டதில் இருவரும் கடுமையாக காயமடைந்தனர். சிகிச்சைக்காக இருவரும் ஷேர் இ கஷ்மீர் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் கைசர் பட் மரணமடைந்தார். சில வருடங்களுக்கு முன் பெற்றோர் மரணித்ததை தொடர்ந்து, கைஸர் பட் தனது இரண்டு சகோதரிகளுடன் உறவினர் ஒருவர் வீட்டில் வசித்து வந்தார்.

இச்சம்பவம் பொதுமக்களிடையே கடும் கோபத்தையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மற்றும் போராடும் இளைஞர்கள் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டன. இருவர் மீதும் பாதுகாப்பு படையினர் வேண்டுமென்றே வாகனத்தை ஏற்றினர் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியதை தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து மறுதினம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்து, போராட்டங்களை தடுப்பதற்காக பல்வேறு இடங்களில் தடுப்புகளை அமைத்தனர்.

போராட்டங்களை முன்னெடுப்பதை தடுக்கும் வகையில் ஹூரியத் (எம்) தலைவர் மிர்வேஸ் உமர் பாரூக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் ஜூன் 2 அன்று கைது செய்யப்பட்டார். சாலைகளும் மார்கெட்டும் வெறிச்சோடி காணப்பட்டன, அரசு வாகனங்கள் எதுவும் ஓடவில்லை, கஷ்மீர் மற்றும் புட்காம் மாவட்டங்களில் குறுகிய காலத்திற்கு இன்டர்நெட் சேவைகள் நிறுத்தப்பட்டன. கட்டுப்பாடின்றி வாகனத்தை ஓட்டியதாக சி.ஆர்.பி.எஃப். ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை, வன்முறையில் ஈடுபட்டதாக போராட்டக்காரர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தது. கல்லறைகளை சேதப்படுத்தியது மற்றும் பாதுகாப்பு படையினரின் எதேச்சதிகார போக்குகளை கண்டித்து செய்யது அலி ஷா ஜீலானி, மிர்வேஸ் உமர் பாரூக் மற்றும் யாசின் மாலிக் ஆகியோர் அடங்கிய கூட்டு எதிர்ப்பு தலைமை ஜூன் 2 அன்று கஷ்மீர் பள்ளத்தாக்கில் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.