படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்

0

படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்: செய்யது சுஜாத் புகாரி 1968 & 2018

ஈதுல் பித்ர் எனப்படும் ஈகைத்திருநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், மூத்த பத்திரிகையாளரும் கஷ்மீரில் வெளிவரும் ஆங்கில முன்னணி நாளிதழ்களில் ஒன்றான ரைசிங் கஷ்மீர் இதழின் ஆசிரியருமான முனைவர் செய்யது சுஜாத் புகாரி, பிரஸ் காலனியில் தனது அலுவலகத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ரமலான் மாதத்தின் நோன்பை திறப்பதற்காக ஸ்ரீநகரில் உள்ள தனது வீட்டிற்கு செல்லவிருந்த நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தாக்குதலில் அவரின் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.

ஜூன் 14 அன்று தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து வாகனத்தில் ஏற முற்பட்ட சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூவர் 50 வயது புகாரியை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றவர் மருத்துவமனையில் இறந்தார். கஷ்மீர் பள்ளத்தாக்கில் அரசாங்கம் அறிவித்த சண்டை நிறுத்த அறிவிப்பை நீட்டிப்பது குறித்து ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் இப்படுகொலை நடைபெற்றது. ரமலான் மாதத்தை முன்னிட்டு அரசாங்கம் அறிவித்த சண்டை நிறுத்தம் ஜூன் 17 அன்று முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அரசாங்கம் அதனை நீட்டிக்கவில்லை. ஜூன் 14 அன்று காலையில்தான் கஷ்மீரில் உள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தனது முதல் அறிக்கையை வெளியிட்டு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தது. இவ்வறிக்கை குறித்து கடுமையாக எதிர்வினையாற்றிய இந்தியா, அதனை ‘தவறானது; தவறான நோக்கம்’ கொண்டது என்று குறிப்பிட்டது.

கஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பல்வேறு கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். அத்துடன் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான மாற்று வழிமுறைகளை கையாளும் டிராக் 2 டிப்லோமசியின் அங்கத்தவராகவும் இருந்துள்ளார்.

நடுநிலை சிந்தனை கொண்டவரும் அமைதிக்காக அழுத்தமான குரல் கொடுத்தவருமான மூத்த பத்திரிகையாளரான சுஜாத் புகாரி, கஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பல்வேறு கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். அத்துடன் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான மாற்று வழிமுறைகளை கையாளும் டிராக் 2 டிப்லோமசியின் அங்கத்தவராகவும் இருந்துள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்துள்ள அவர், பல இளம் பத்திரிகையாளர்களையும் உருவாக்கியுள்ளார். ரமலான் மாதத்தில் அரசாங்கம் வெளியிட்ட சண்டை நிறுத்தத்தை வரவேற்ற அவர், தொடர் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு நம்பிக்கையின் கீற்றை இது அளிக்கிறது என்றும் கூறியிருந்தார்.

வடக்கு கஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள அவரின் சொந்த ஊரான கிரீரி கிராமத்தில் புகாரியின் உடல் ஜூன் 15 அன்று அடக்கம் செய்யப்பட்டது. கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான நண்பர்களும் ஆதரவாளர்களும் அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். கல்வியாளர்கள், சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரசு துறையில் பணியாற்றுபவர்கள் என பலர் ஜூன் 18 அன்று அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தனர். கஷ்மீருக்கான மத்திய அரசின் சிறப்பு பிரதிநிதியான தினேஷ்வர் சர்மா, புகாரியின் இல்லத்திற்குச் சென்று, குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்தார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.