பட்டப் பகலில் வெட்ட வெளியில் தற்கொலை!

0

டெல்லி: நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று நடைபெற்ற பேரணியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. பகல் 1.30 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் விவசாயிகளின் மோசமான நிலையை காட்டுவதாக அமைந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட அந்த நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கஜேந்திர சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டன பேரணி நடைபெற்று கொண்டிருக்கும் போது மரத்தின் மீது ஏறிய கஜேந்திர சிங் மரத்தில் தூக்கிலிட்டு கொண்டார். அவர் தூக்கிலிட முயற்சிப்பதை கண்ட பின்னரும் காவல்துறையினர் எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சாட்டினர்.
பின்னர் பேரணியில் கலந்து கொண்டவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் முன்னரே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தன்னுடைய பயிர்கள் நாசமாகி விட்டதாகவும் மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு தன்னால் எப்படி வாழ முடியும் என்றும் கஜேந்திர சிங் ஒரு பேப்பரில் எழுதி இருந்தார்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு எதிராக நடைபெற்ற பேரணியின் போது நடைபெற்ற இந்த தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(புகைப்பட உதவி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்)

Comments are closed.