பணமதிப்பிழப்பு இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்

0

நாட்டில் புழக்கத்தில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்கப்போவதாகவும் கள்ளப் பணத்தை அழிக்கப்போதாகவும் கூறி மத்திய பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் மிகப்பெரிய ஊழல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறியுள்ளன.

பழைய 500 மற்றும் 1000  ரூபாய் தாள்களை செல்லாததாக அவித்த பின்னர் மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்த புதிய 500 மற்றும் 2000 ரூபாய் தாள்களில் பல தவறுகள் உள்ளது என்று தொடக்கம் முதலே சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அச்சடித்த 500 ரூபாய் தாள்களிலேயே இரண்டு ரகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜ்ய சபாவில் பேசிய சரத் யாதவ், அரசு அச்சடித்த இருவேறு 500 ரூபாய் தாள்களின் நகல்களை காண்பித்தார். இன்னும் அவர் நகல் எடுத்த ருபாய் அசல் தாள்களை அருண் ஜேட்லியின் பார்வைக்கு தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் கபில் சிபல், பாஜக அரசு ஏன் பணமதிப்பிழப்பை செய்தது என்று தனக்குத் தெரியும் என்றும் “அரசு ஒரு 500 ரூபாய் தாளை தங்கள் கட்சியினருக்கும் மற்றொன்றை பிறருக்கும் அச்சடித்துள்ளது” என்றும் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரான குலாம் நபி ஆசாத், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழல் இந்த பணமதிப்பிழப்பு என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அருண் ஜேட்லி இரு வேறு அச்சகங்களில் ரூபாய் தாள்கள் அச்சடிக்கப்பட்டதால் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ளார்.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடத்தப்பட்டது என்று கூறிய போதும் இது போன்று வெவ்வேறு ரூபாய் தாள்களை அரசே அச்சடிப்பதால் பொதுமக்களுக்கு எது அசல் எது போலி என்ற வேறுபாடு தெரியாமல் போய்விடும்.

இந்நிலையில் இந்தியாவில் பணமதிப்பிழப்பிற்கு பிறகு புழக்கத்தில் இருந்ததாக கண்டறியப்பட்ட கள்ள நோட்டுக்களின் மதிப்பு வெறும் 11.23 கொடிகள் தான் என்று தற்போது தெரியவந்துள்ளது. இந்த 11.23 கோடிகளுக்காக மொத்தம் 15 லட்சம் கோடி பணத்தை பாஜக அரசு செல்லாததாக அறிவித்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பணமதிப்பிழைப்பு நடவடிக்கயில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளின் மதிப்புடன் கள்ள நோட்டுக்களின் மதிப்பை ஒப்பிடுகையில் இது வெறும் .0007% சதவிகிதம் தான் என்று தெரியவந்துள்ளது. இதற்காத்தான் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மக்களின் உயிரை பலிவாங்கி நாட்டு மக்களுக்கு எண்ணற்ற துயரம் ஏற்படுத்தப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நாட்டில் கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகளில் பெரும்பான்மையானவை இந்தியாவின் முன்மாதிரி மாநிலம் என்று பாஜகவினரால் போற்றப்பட்ட குஜராத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.