பணமதிப்பிழப்பு: பா.ஜ.க.வின் மாபெரும் ஊழல்

0

பணமதிப்பிழப்பு: பா.ஜ.க.வின் மாபெரும் ஊழல்

நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை எல்லாம் ஒழிக்கப் போகிறேன் என்று ஒரே இரவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தார் மோடி. இந்த நடவடிக்கையினால் நாடு பயனடைந்ததோ இல்லையோ பா.ஜ.க. பெருமளவு பயனடைந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடைபெற்று ஐந்து நாட்களுக்குள் 3118.51 கோடி ரூபாய் பா.ஜ.க.விற்கு நெருக்கமான பதினொன்று கூட்டுறவு வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சூரஜ்வாலா, “சுதந்திர இந்தியாவில் இது (பணமதிப்பிழப்பு நடவடிக்கை) கருப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்ற நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் என்று தற்போது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மனோரஞ்சன் ராய் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் கட்சி இக்குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இந்த தகவலில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி நாட்டிலேயே அதிகப்படியான தொகையாக 745.59 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இந்த பரிவர்த்தனைகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ஐந்து நாட்களில் நடைபெற்றுள்ளன. 2000 ஆம் ஆண்டில் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராக, தற்போதைய பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இருந்தார் என்பதும் தற்போதும் இவ்வங்கியின் இயக்குனராக அவர் உள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.