பணமில்லா பரிவர்த்தனை

0

பணமில்லா பரிவர்த்தனை

பல ஆண்டுகளாக பணமில்லா பரிவர்த்தனை நம்மிடையே வங்கி அட்டைகள் (கிரெடிட்/டெபிட் கார்டு) வழியே இருந்து வந்த போதிலும் அதனை மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது இல்லை. பணமில்லா பரிவர்த்தனையை மக்கள் ஒரு சிரமமாக, சில நேரங்களில் அதனை ஒரு ஆபத்தாக நோக்கும் அணுகுமுறை மக்களிடம் இருந்து வருகிறது. மேல்தட்டினர் தவிர்த்து மற்றவர்கள் தங்களின் பணம் தங்கள் கைகளில் “பணமாக” இருப்பதையே விரும்புகின்றனர். இதனால்தான் மாத ஊதியத்தை வங்கியில் பெறுபவர்கள் கூட அன்றைய தினமே அதனை “பணமாக” கையில் எடுத்து விடுகின்றனர். இந்திய மக்களின் இந்த பழக்கம் அவர்களை பல நேரங்களில் பல நிதி நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றி உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வங்கிகள் தங்களிடம் போதிய பணமில்லை என்று கூறி கைவிரித்துவிட்டாலும் கூட, அரிசி டப்பாக்கள் அன்றாடம் செலவுகளுக்கு இந்திய குடும்பங்களுக்கு உதவி செய்தது.

இப்படியிருக்க தற்போது வங்கிகள் தங்கள் கிளைகளுக்கு மக்களின் வரத்தை குறைக்கவும் பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி மக்களை தள்ளியும் வருகின்றன. வங்கிகளின் இலாபநோக்கு மற்றும் மக்களின் பொருளாதார நடத்தையின் மீதான அவர்களின் கட்டுப்பாட்டின் வெளிப்பாடாகவே இது இருக்கிறது. இதற்கென இந்நிறுவனங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு மோடி தலைமையிலான பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை. பாஜக அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து பணமில்லா பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் நிறுவனம் அடைந்த இலாபத்தை முந்தைய விடியலில் (புதிய விடியல் ஜூன் 1-30, 2018) நாம் குறிப்பிட்டிருந்தோம். தற்போது பிற வங்கிகளும் இந்த முறைக்கு மக்களை தயார்படுத்தி மக்களை அதனை நோக்கி தள்ளியும் வருகின்றன.

பணமில்லா பரிவர்த்தனையை மக்கள் மத்தியில் கவர்ச்சிகரமாக காட்ட மறைமுகமான பல யுக்திகளை நிதி நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.