பதான்கோட் தாக்குதல்: தீவிரவாதிகளின் எண்ணிக்கையில் குழம்பும் அரசு

0

கடந்த ஜனவரி மாதம் பதான்கோட் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் குறித்து பாராளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பதான்கோட் விமான தளத்தை ஆறு தீவிரவாதிகள் தாக்கினர் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, பதான்கோட் விமான தளத்தை நான்கு தீவிரவாதிகள் தான் தாக்கினர் என்றும் மத்திய அரசு மக்களவையில் கூறியுள்ளது.

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.ரவ்நீத் சிங்கின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், “பாகிஸ்தானை மையமாக கொண்ட நான்கு தீவிரவாதிகள் பஞ்சாப் நுழைந்து பதான்கோட் விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தினர்” என்று கூறியுள்ளார்.

இவரது இந்த கூற்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கூற்றுக்கு முரனாக உள்ளது. ராஜ்நாத் சிங் பல முறை பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் பதான்கோட் விமான தளத்தை தாக்கியது ஆறு தீவிரவாதிகள் என்று கூறியிருந்தார். மேலும் தனது இந்த கூற்றுக்கு ஆதாரமாக தடவியல் நிபுணர்களின் அறிக்கையையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் விமான தளத்தை தாக்கியது ஆறு தீவிரவாதிகள் என்றும் அந்த தாக்குதலின் போது இரண்டு தீவிரவாதிகள் பேசிக்கொண்டிருப்பதை விஷேஷ கருவிகள் மூலம் தாங்கள் கேட்டதாகவும் தேச பாதுகாப்பு படையினர் கூறினர்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிகாரும் மொத்தம் ஆறு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்று கூறினார். பின்னர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதனை வழிமொழிந்தார். மேலும் இரண்டு தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாக கூறப்பட்ட பதுங்குக் குழியில் இருந்த இரண்டு கருகிய உடல்கள் தீவிரவாதிகளுடையது என்று ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.

ஆனால் இந்த தாக்குதலுக்கு பிறகு நான்கு தீவிரவாதிகளின் உடல்கள் மட்டுமே கிடைத்ததாகவும் அத்துடன் நான்கு AK47 ரக துப்பாக்கிகளும் மூன்று கைத்துப்பாக்கிகளும் இருந்ததாகவும் வேறு தீவிரவாதிகள் இருந்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று தேசிய புலனாய்வுத்துறை கூறியுள்ளது. பதுங்குக் குழிகளில் உள்ள கருகிய தீவிரவாதிகளின் உடல்கள் என்று கூறப்பட்ட
சடலத்தில் இருந்து எழும்புத்துண்டுகளோ அல்லது பற்கள் போன்ற எந்த தடயமும் கிடைக்கவில்லை. அப்படி ஏதேனும் கிடைக்கின்ற பத்ச்சத்தில் அது மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அது குறித்த தகவல் வெளியாகியிருக்கும்.

மத்திய அரிசன் இந்த முன்னுக்குப் பின் முரணான இந்த அறிக்கைகளினால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பாகிஸ்தான் ஊடகங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Comments are closed.