பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை

1

உள்துறை அமைச்சகத்தின் பாராளுமன்ற கமிட்டி, பதான்கோட் தாக்குதலை நடத்திய ஜெயிஷ்-ஈ-முஹம்மத் தீவிரவாதிகள் ஏன் பஞ்சாம் காவல்துறை எஸ்.பி. சல்விந்தர் சிங்கை அவரது வாகனத்தை மட்டும் பறித்துக்கொண்டு விடுவித்தனர் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வாகனத்தில் தான் அவர்கள் கடந்த 2016  ஜனவரி 2  ஆம் தேதி பதான்கோட் விமான நிலையத்திற்கு சென்று தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட இந்த கமிட்டி, இத்தாக்குதலை நடத்த போதைப் பொருள் கடத்துபவர்கள் தீவிரவாதிகளுக்கு உதவினரா என்றும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தலைமை தாங்கும் இந்த கமிட்டியில் சிரோமணி அகாலி தளத்தின் பிரேம் சிங் சந்துமஜ்ரா, பாஜக வின் கிர்ரோன் கெர் உட்பட பல எம்.பி.க்கள் உள்ளனர். இந்த கமிட்டி சமர்பித்த 70 பக்க அறிக்கை பஞ்சாப் காவல்துறையை நேரடியாக தாக்கியுள்ளது. மேலும் இதில் NIA வின் பங்கு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.

72 மணி நேரம் நடைபெற்ற இந்த தாக்குதலில் NSGயின்  லெப்டினன்ட் கலோனல் நிரஞ்சன் உட்பட ஏழு பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து காங்கிரஸ், அகாலி தளம் மற்றும் ஆம் ஆதி இடையே பெரும் வாக்குவாதம் நிகழ்ந்தது. இறுதியில் இதற்கு காரணம் போதைப்பொருள் கடத்துபவர்கள் என்ற முடிவிற்கு வரப்பட்டது.

ஆனால் இவர்களால் சல்விந்தர் சிங் மற்றும் அவரது நண்பரும் நகை வியாபாரியுமான ராஜேஷ் வெர்மா ஆகியோர் ஏன் உயிருடன் விடப்பட்டனர் என்பதற்கான கேள்விக்கு மட்டும் பதிலளிக்க இயலவில்லை. மேலும் இதனை NIA முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் இந்த தாக்குதலில் பஞ்சாப் காவல்துறையின் பங்கு குறித்து பலத்த சந்தேகம் இருப்பதாகவும் பஞ்சாப் காவல்துறை எஸ்.பி. சல்விந்தர் சிங் கடத்தி வைக்கப்பட்ட பின்னரும் பஞ்சாப் காவல்துறையினர் இது மிக ஆபத்தான தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை என்ற முடிசிற்கு வர மிக அதிக காலம் எடுத்துக்கொண்டனர்  என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

மேலும் தீவிரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கை முன்னதாகவே கொடுக்கப்பட்ட வேலையில் தீவிரவாதிகள் எவ்வாறு உயர் பாதுகாப்பு கொண்ட விமானப்படை தளத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்றும் அந்த அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது.

 

Discussion1 Comment

  1. இதுவரை நடந்த எந்த தீவிரவாத தாக்குதலிலும் ஏன் தடுத்து பாதுகாக்கவில்லை என்ற விசாரணை நடத்தப்பட்டதாக தெரியவில்லை.
    நம் நாட்டு பாதுகாப்பிற்காக பல லட்சம் கோடிகளை நாம் செலவிடுகிறோம். எதற்காக தீவிரவாத தாக்குதல் நடந்தவுடன் ஒருவரை சுட்டிக்காண்பிக்கவா அல்லது தாக்குதலே நடக்கமால் பாதுகாக்கவா.