பதான்கோட் தாக்குதல் புகழ் காவல்துறை கண்காணிப்பாளர் சல்விந்தர் சிங் பணிநீக்கம்

0

பதான்கோட் தாக்குதலின் போது தீவிரவாதிகள் தன்னை தாக்கி தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு பதான்கோட் விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறிய காவல்துறை கண்காணிப்பாளர் சல்விந்தர் சிங்-ஐ பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் பணிநீக்கம் (கட்டாய ஓய்வு) செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு அவரது சர்ச்சைக்குரிய நடத்தை, ஒழுக்கமின்மை, மற்றும் பஞ்சாப் காவல்துறையின் பெயருக்கு களங்கம் விளைவித்தது ஆகியன காரணங்களாக கூறப்பட்டுள்ளது.

54 வயதுடைய சல்விந்தர் சிங், பதான்கோட் விமான தளத்தை 2016 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி தீவிரவாதிகள் தாக்கிய போது செய்திகளில் அதிகம் பேசப்பட்டார். இவரை தீவிராதிகள் தாக்கியதாகவும் பின்னர் இவரின் வாகனத்தை எடுத்துக் கொண்ட தீவிரவாதிகள் அதனை பயன்படுத்தி பதான்கோட் விமான தளம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியிருந்தார். இவரது இந்த கூற்றை தேசிய புலனாய்வுத்துறை முதலில் விசாரித்தது பின்னர் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. இறுதியில் இவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார்.

தற்போது இவரது பதவிக்காலம் முடிவடையும் முன்னரே இவருக்கு கட்டாய ஓய்வு வழங்கி பஞ்சாப் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு ஓய்வு வழங்கப்படும் அதிகாரிகளுக்கு மூன்று மாத கால நோட்டீஸ் வளங்கப்படும் அல்லது மூன்று மாதகால ஊதியம் வழங்கப்படும். இவருக்கு இதில் எதுவும் வழங்கப்பட்டதா என்று தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

தற்போது அம்ரிஸ்டர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காவல்துறை அதிகாரி சல்விந்தர் சிங், பாலியில் வன்முரையாளர் என்று ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் சரண் அடைந்தார். இவர் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவரை கற்பழிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க ரூபாய் 50000 லஞ்சமாக கேட்டதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவரின் பணிக்காலத்தில் இவரது நடத்தை, ஒழுக்கக்கேடு, மற்றும் இவர் மீதான கிரிமினல் குற்றங்களை கருத்தில் கொண்டு பஞ்சாப் DGP இவருக்கு கட்டாய ஓய்வு வழங்கும்படி பரிந்துரை செய்துள்ளார். சமீபத்தில் தனது பணியிடை நீக்க கால ஊதியத்தை 50%  தில் இருந்து 70% ஆக உயர்த்தும்படி சல்விந்தர் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.