பத்திரிகையாளரை தாக்கிய குஜராத் இனப்படுகொலை குற்றவாளி

0

குஜராத் இனப்படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி ஒருவர் தன்னை பேட்டியெடுக்க வந்த பத்திரிகையாளர் ஒருவரை குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று மாலை தாக்கியுள்ளார். ரேவதி லால் என்ற பத்திரிகையாளர் நரோடா பாட்டியா வழக்கில் தண்டனை பெற்றவர்கள் குறித்த புத்தகமொன்றை எழுதி வருகிறார்.
இதற்காக அவர் இவ்வழக்கில் தண்டனை பெற்றுள்ள சுரேஷ் சாரா என்பவரை நேற்று மாலை பேட்டியெடுக்க சென்றுள்ளார். அப்போது ரேவதி லாலை சுரேஷ் சாரா தாக்கியுள்ளார். சுரேஷின் மகனும் மற்றவர்களும் தலையிட்டதை தொடர்ந்து ரேவதி லால் அங்கிருந்து தப்பினார். சுரேஷ் சாராவிடம் சில கேள்விகளை கேட்டதை தொடர்ந்து திடீரென்று தன்னை தாக்கியதாக ரேவதி தெரிவித்துள்ளார்.
நரோடா பாட்டியா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சுரேஷ் சாராவிற்கு 2013ஆம் வருடம் 31 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சென்ற முறை பரோலில் வந்த போது தனது மனைவியிடம் அத்துமீறி நடந்து கொண்ட சுரேஷ் சாராவின் பரோல் ரத்து செய்யப்பட்டது. ஆனால் சென்ற வாரம் அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் மீண்டும் பரோல் வழங்கியது.
சென்ற முறை பரோல் ரத்து செய்யப்பட்ட சுரேஷ் சாராவிற்கு நீதிமன்றம் எதற்காக மீண்டும் பரோல் வழங்கியது என்று ரேவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.