பத்திரிகையாளர் என தெரிந்தும் துப்பாகிச் சூடு நடத்திய இராணுவம்

0

கஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் புர்ஹான் வாணி கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு நிகழ்ந்து வரும் பதற்றத்தின் விலையாக இதுவரை சுமார் 570 கஷ்மீர் மக்கள் தங்களின் பார்வைகளை இழந்துள்ளதாக தி நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்திய பாதுகாப்பு படையினர் மீது கற்களை எரியும் ஒவ்வொருவரின் வாயிலும் “எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்” என்ற வாசகங்கள் தான் ஒலிக்கின்றன. இப்படி களத்தில் நடக்கும் செய்திகளை அரசு கூறுவதைப் போன்று ஒளிவு மறைவின்றி மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியை சில பத்திரிகையாளர்கள் அங்கிருந்து செய்து வருகின்றனர். போராட்டக்காரர்களின் கோபங்களையும் அரசு தரப்பு நியாயங்களையும் பதிவிடும் இவர்களும் பாதுகாப்பு படையினரால் தாக்கப்படுவது பாதுகாப்பு படையினரின் நோக்கம் அப்பகுதியில் அமைதியை நிலை நாட்டுவது தானா என்ற கேள்வியை எழுப்புகிறது.

கஷ்மீரில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை பதிவு செய்து வரும் புகைப்பட ஊடவியலாலரான சுஹைப் மக்பூல் என்பவர் சமீபத்திய போராட்டம் ஒன்றை படமெடுக்க சென்றுள்ளார். போராட்டத்தின் போது இவர் மீதும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் அவரின் இடது கண் பார்வையிழந்துள்ளது.

தன்னை சுட்ட பாதுகாப்பு படையினரிடம் தன்னுடைய கேமராவை உயர்த்தி தான் ஒரு பத்திரிக்கையாளர் என்பதை தெளிவாக உணர்த்தியிருக்கிறார் சுஹைப். ஆனாலும் தன்னை அந்த இராணுவ வீரர் சுட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் சுடப்பட்ட போது தன்னுடைய இடது கண் வெடித்து சிதறியது போன்று இருந்தது என்று அவர் கூறியுள்ளார். தற்போது ஒரு கண்ணில் பார்வையற்ற அவர் தன்னை சுட்ட இராணுவ வீரரிடம் தன்னை ஏன் அவர் சுட்டார் என்ற கேள்வியை கேட்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.