பத்திரிகை சுதந்திரத்தின் எதிர்காலம்

0

பத்திரிகை சுதந்திரத்தின் எதிர்காலம்

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் பத்திரிகை துறை நாளுக்கு நாள் மிகப்பெரிய அச்சுறுத்தலையும், பாதுகாப்பற்ற சூழலையும் சந்தித்து வருகிறது. சுதந்திரத்தின் சுவர்க்கமாக (?) கருதப்படும் ஐரோப்பிய நாடுகளில் கூட பத்திரிகை பணி மகிழ்ச்சிகரமானதாக இல்லை. மிகப்பெரிய ஜனநாயக தேசமான இந்தியாவிலும் சுதந்திரமான பத்திரிகை பணி சாத்தியமற்றதாக மாறிவிட்டது. உலக பத்திரிகையாளர்கள் சங்கமே இதனை சுட்டிக்காட்டியுள்ளது.

பத்திரிகையாளர்கள் தங்களது பணியை அச்சமின்றி நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படும்போது அங்கு ஜனநாயகத்திற்கு மரண மணி முழங்குகிறது என்று பொருள். அது இந்தியாவில் எதார்த்தத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பதை சமகால நிகழ்வுகள் நமக்கு எடுத்தியம்புகின்றன. பத்திரிகை சுதந்திரத்தில் அண்டை நாடான பாகிஸ்தானை விட நாம் பின் தங்கியுள்ளோம். பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 138-வது இடத்தில் உள்ளதாக எல்லைகள் கடந்த செய்தியாளர்கள் அமைப்பு (ஸிஷிதி) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இந்திய ப்ரஸ் கவுன்சில் சேர்மன் சந்திரமௌலி குமார் பிரசாத் இதனை மறுத்துரைக்கவில்லை.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொடூரமான படுகொலை தொடர்பான சூடான விவாதங்கள் சர்வதேச பத்திரிகைகளில் இதுவரை ஓயவில்லை. உலகில் கொல்லப்படும் அல்லது காணாமல் போகும் பத்திரிகையாளர்கள் குறித்து பின்னர் ஏதும் நாம் கேள்விப்படுவதில்லை. பல சம்பவங்கள் இயல்பான மரணங்கள் அல்லது தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலில் இடம் பிடிக்கும். ஆனால், கஷோக்ஜியின் மரணம் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.