பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரபல பத்திரிக்கைகளுக்கு தடை விதித்த வெள்ளை மாளிகை

0

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் போது அதில் பங்கேற்க பிரபல அமெரிக்க பத்திரிகைகளான CNN, தி நியு யார்க் டைம்ஸ், பொலிடிக்கோ, தி லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் மற்றும் பஸ்ஃபீட் ஆகிய செய்தி நிறுவனங்கள் கலந்துகொள்ள வெள்ளை மாளிகள் தடை விதித்துள்ளது.

இந்த நிறுவனங்களுக்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. வெள்ளை மாளிகையின் இந்த முடிவு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ராய்டர்ஸ் நிறுவனமும் மேலும் ப்ளூம்பெர்க், CBS உட்பட பத்து செய்தி நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ச்சியாக பத்திரிகையாளர்களை சாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்தில் பேசிய அவர், இந்த செய்தி நிறுவனங்களை போலியான செய்தி தரும் நிறுவனங்கள் என்றும் அமெரிக்க மக்களின் எதிரி என்றும் அவர் கூறியிருந்தார்.

இதனையடுத்து காகில் எனப்படும் கேமரா அல்லாத சந்திப்பு அமெரிக்க பத்திரிக்கை செயலாளர் ஸ்பைசர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் என்றும் எல்லா சந்திப்புகளும் கேமெராவில் நடைபெற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று ஸ்பைசர் கூறியுள்ளார்.

ச்பைசரின் இந்த முடிவிற்கு பல செய்தி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. “இதுவரை இது போன்ற சம்பவம் அமெரிக்க வெள்ளை மாளிகையில் பல்வேறு ஜனாதிபதி ஆட்சியில் இருந்த போது செய்திகள் சேர்கரித்த எங்கள் வரலாற்றில் நடைபெற்றதில்லை” என்று தி நியு யார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், “நியு யார்க் டைம்ஸ் மற்றும் இன்ன பிற ஊடகங்களை ஒதுக்கியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.” என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

CNN தனது டிவிட்டர் பக்கத்தில், “டிரம்ப்பின் வெள்ளை மாளிகையின் இந்த செயல் ஏற்க முடியாதது. அவர்களுக்கு பிடிக்காத உண்மைகளை நீங்கள் வெளிப்படுத்தும் போது இப்படித்தான் அவர்கள் நடந்துகொள்வார்கள். ஆனாலும் நாங்கள் எங்களது பணியை தொடர்வோம்.” என்று கூறியுள்ளது.

இந்த முடிவிற்கு வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கமும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள காகில் கையாளப்பட்ட முறையை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சக பத்திரிகையாளர்கள் அங்கு அனுமதிக்கப் படாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில பத்திரிகையாளர்கள் அந்த சந்திப்பை விட்டு வெளியேறினர்.

இது போன்ற காகில் வெள்ளை மாளிகைக்கு புதிதில்லை என்றாலும் அதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்று எந்த கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம். தற்போது நடந்த காகிலில் பங்கேற்ற சில நிறுவனங்கள் அங்கு பதிவு செய்யப்பட்ட ஆடியோவை பிற செய்தி நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதும் குறிப்பிட்ட சில ஊடகங்கள் பங்கேற்ப்பதை விட்டு தடை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.