பன்சாரே மற்றும் தபோல்கர் கொலைகள் நன்றாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டவை: பாம்பே உயர்நீதி மன்றம்

0

பகுத்தறிவுவாதிகளான நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோரின் கொலைகள் நன்றாக திட்டமிடப்பட்டவை என்று பாம்பே உயர்நீதிமன்றத்தின் நீதிபதி S.C.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி கண்கன்வாடி அடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கொலைகளில் ஈடுபட்டவர்களுக்கு இயக்க ரீதியிலான பின்பலமும் இருந்துள்ளது என்றும் இந்த இரண்டு கொலைகளுக்கும் தெளிவான ஒற்றுமை உள்ளது என்றும் அந்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்தவை அல்ல என்பதனை இந்த கொலைகளின் விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு சில இயக்கங்கள் பின்பலமாக இருந்து அவர்களுக்கு தேவையான பொருளாதார உதவி முதற்கொண்டு அனைத்து உதவிகளையும் செய்திருக்கவேண்டும் என்று CBI மற்றும் CID சமர்பித்த விசாரணை அறிக்கைகளை படித்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

2013 தபோல்கரை சுட்டுக் கொன்று தற்போது தலைமறைவாக இருப்பதாக CBI-யால் கூறப்படும் சாரங் அகோல்கர் மற்றும் வினய் பவார் ஆகியோர் தொடர்பான விசாரணையில் CBI அதன் தற்போதைய விசாரணை அணுகுமுறையைத தாண்டி விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

இந்த இரு கொலைகளுக்கும் தெளிவான ஒற்றுமை உள்ளது என்றும் மாநில CID யுடன் ஒருகிணைந்து நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வங்கி பரிமாற்றங்கள், ATM பரிமாற்றங்கள், ரயில் முன்பதிவுகள் போன்ற தகவல்களை ஆராய்ந்து இவர்களை கண்டுபிடிக்குமாறு நீதிபதி தர்மாதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் நான்கு அல்லது ஐந்து மாநிலங்களுடன் மட்டும் தான் இந்த எல்லைகள் இணைகின்றன என்றும் அங்கு தான் குற்றவாளிகள் சென்றிருக்க முடியும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் ஒருவர் அதிக நாள் தலைமறைவாக வாழ்வது இயலாத காரியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு புதிய விசாரணை அறிக்கைகளை வருகிற செப்டெம்பர் மாதம் 13 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் கொல்லப்பட்ட இரு பகுத்தறிவுவாதிகளின் கும்டும்பத்தினரும், CBI இயக்குனர் மற்றும் உள்துறை செயலாளர் இந்த விசாரணைக்கு நேரடி பொறுப்பேற்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை அடைங்கிய அஃபிடவிட்டை சமர்பிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி அதிகாலை நடைப்பயிற்ச்சி செய்யும் வேலையில் தபோல்கர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி கொல்கபூரில் வைத்து பன்சாரே சுட்டப்பட்டு அந்த காயங்களினால் பிப்ரவரி 20 ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்த இரு கொலைகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் தலைமரைவாக உள்ளனர் என்றும் அவர்களை தேடும் பணிகளில் தாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்றும் விசாரணை நிறுவனங்கள் நீதிமன்றத்தில் கூறி வரும் நிலையில் கொல்லப்பட்ட பகுத்தறிவுவாதிகளின் உறவினர்களோ இந்த இரு வழக்குகளும் நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Comments are closed.