பயங்கரவாதிக்கு பா.ஜ.க. தேர்தல் சீட்

0

பயங்கரவாதிக்கு பா.ஜ.க. தேர்தல் சீட்

1993 மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் பயன்படுத்திய வாகனம் இவர் பெயரில் இருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மரண தண்டனை விதிக்கப்பட்டு இவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது. ஜூலை 30, 2015 அன்று இவர் தூக்கிலிடப்பட்டார். பெயர்: யாகூப் மேமன்.

2008 மாலேகான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வாகனம் இவர் பெயரில் இருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன. தற்போது ஜாமீனில் உள்ள இவர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பாக போட்டியிடுகிறார். பெயர்: பிரக்யா சிங் தாக்கூர். காவி உடை அணிந்து வலம் வரும் இவர் தன்னை சாமியார் என்றும் அழைத்துக் கொள்கிறார்.

தேச பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு, பயங்கரவாதிகள் அழிப்பு என்று தன் அரசியல் பிழைப்பை நடத்தி வரும் பா.ஜ.க. குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஒரு பயங்கரவாதியை தனது நாடாளுமன்ற வேட்பாளராக களம் இறக்கியுள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்கை எதிர்த்து மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் இவர் போட்டியிடுகிறார்.

செப்டம்பர் 29, 2008 அன்று மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2006ல் இதே நகரம் குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டதும் முஸ்லிம்களே கொல்லப்பட்டனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

கொல்லப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தபோதும் ஆரம்பத்தில் இந்த வழக்குகளில் முஸ்லிம்கள் மீதே குற்றமும் சுமத்தப்பட்டு முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டனர். ஹேமந்த் கர்கரே தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு படையினர் (ஏ.டி.எஸ்.) இந்த வழக்குகளின் விசாரணையை மேற்கொண்ட பிறகுதான் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர், முன்னர் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் அப்பாவிகள் என்பதும் நிரூபணமானது.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.