பயணத்தின் திருப்புமுனை

0

பயணத்தின் திருப்புமுனை

சம்பவம் -01

நடுநிசி நேரம். பாலைவனத்தின் நடுவினில் ஒரு கூடாரம். கடும் இருள் சூழ்ந்திருந்தது. சில வியாபாரிகள் அதில் தங்கியிருந்தார்கள். இரவோடு இரவாக அவர்கள் வியாபாரப் பொருட்களோடு உரிய இடத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் செல்ல முடியாமல் தடுத்த ஒரே காரணம்… வழிப்பறிக் கொள்ளைக்காரன் ‘புழைல்’.

சம்பவம் -02

ஒரு வியாபாரக் குழு. தாம் சுமந்து செல்லும் உப்பிற்குக்கூட உத்திரவாதம் இல்லாத நிலையில், ஊர் மக்களிடம் ஒரு உதவி கேட்கின்றார்கள். தயவு செய்து எம்மை வழிப்பறிக் கொள்ளைக்காரன் ‘புழைல்’ இடமிருந்து காப்பாற்றுங்கள்.

எந்தவொரு வியாபாரிக்கும் தைரியமாகச் செல்ல முடியாமல் வழிப்பறிக் கொள்ளையிட்டு அந்தப் பிராந்தியத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அந்த ‘புழைல்’ யார்?

அவர்தான் மிகப் பெரும் அறிவு மேதை, சட்ட வல்லுனர், ஹதீஸ் கலை அறிஞர், இறைநேசர் இமாம் புழைல் இப்னு இயாழ் (ரஹ்). அவர் ஒரு வழிப்பறிக்கொள்ளையரா..? நம்ப முடியவில்லையா? இதுதான் நாம் இன்று பார்க்கும் பயணத்தின் திருப்புமுனை. ‘புழைல் இப்னு இயாழ்’ என்றாலே திருட்டுக்கும், வழிப்பறிக் கொள்ளைக்கும் பிரசித்தமானவர். மட்டுமல்லாது, மிகத் தந்திரமானவர். பலமான உடற்கட்டமைப்பைக் கொண்டவர். அவர் எந்த இடத்தில் எப்படித் தாக்குவார் என்பது ஒரு புரியாத புதிர். இவரிடமிருந்து பாதுகாப்பு பெறுவதுதான் அக்கால வியாபாரிகள் மற்றும் ஊர் மக்களின் பெரும் சவாலாக இருந்தது.

அல்லாஹ், தான் நாடியவர்களை தான் நாடிய வகையில் நேர்வழிப்படுத்துவான் என்பதற்கு இவரது வாழ்க்கை ஒரு பெரும் சான்று. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.