“பயத்தில் இருந்து விடுதலை” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்த உமர் காலித்தை கொல்ல முயற்சி

0

“பயத்தில் இருந்து விடுதலை” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்த உமர் காலித்தை கொல்ல முயற்சி

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கியுடன் வந்த நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உமர் காலித் உயிர் தப்பினார்.

டில்லியில் உள்ள Constitution Club of India வில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்ற வந்த உமர் காலித் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் விட்டுச் சென்ற கைத் துப்பாக்கி ஒன்றையும் ஆறு தோட்டாக்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இன்னும் சிலர் இந்த தாக்குதலை நடத்தியவர்கள் தப்பி ஓடும் தருணத்தில் துப்பாக்கி சுடும் சப்தத்தை கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஊடகத்தினரிடம் கருத்து தெரிவித்த உமர் காலித், “Constitution Club அருகே உள்ள தேநீர் கடையில் நான் தேநீர் அருந்துவிட்டு உள்ளே வரும் வேளையில் என் பின்னால் இருந்து ஆயுதத்துடன் வந்த ஒருவர் என்னை தாக்கினர். தற்காப்பிற்கு நான் அவரை தாக்கி எனது நண்பர்களின் உதவியுடன் அவரை தடுத்ததும் அவர் தப்பி ஓடிவிட்டார்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பாக டில்லி காவல்துறை பாராளுமந்தத் தெரு காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும் ஆயுத வழக்கும் பதிவு செய்துள்ளது. உமர் காலித் மீதான தாக்குதலை உறுதி செய்த காவல்துறை இணை ஆணையர் அஜெய் சவுதிரி,வெறுப்பிற்கு எதிரான ஒன்று கூடல் என்ற நிகழ்ச்சியில் கழந்துகொள்ள வந்த உமர் காலித் மீது மதியம் 2:30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் கூறிய அவர், “தாக்குதல் நடத்திய நபர் தப்பி ஓடும் காட்சி CCTV கேமராக்களில் பதிவாகியுள்ளது. பல காவல்துறை குழுக்கள் இந்த வழக்கை விசாரிக்கின்றனர். தாக்குதல் நடத்திய நபர் விரைவில் கைது செய்யப்படுவார்.” என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் உமர் காலித்தை நோக்கி துப்பாக்கியால் சுடப்படவில்லை என்றும் தாக்குதல் நடத்தியவர் தப்பியோடிய தருணத்தில் தான் அவர் வைத்திருந்த துப்பாக்கி கீழே விழுந்துள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கியால் சுடப்படவில்லை என்பதை உறுதி செய்ய அந்த துப்பாக்கி தடவியல் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று சவுத்திரி தெரிவித்துள்ளார்.

இது முன்பே நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்த டில்லி காவல்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி மது வெர்மா, “தாக்குதல் நடத்திய நபர் எந்த ஒரு இயக்கத்தையும் சார்ந்தவரா அல்லது அவர் ஒரு தனி நபரா என்பதை இப்போது தெரிவிக்க இயலாது. தாக்குதல் நடத்தியவர் விரைவில் கைது செய்யப்படுவார்.” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து எழுத்துப் பூர்வமாக தனது புகாரை பாராளுமன்ற தெரு காவல் நிலையத்தில் அளித்த உமர் காலித், “பயத்தில் இருந்து விடுதலை” என்ற தலைப்பிலான் நிகழ்ச்சியில் பங்கேற்க நான் வந்திருந்த வேளையில் இந்த நிக்ழ்வு நடந்துள்ளது தான் இங்கே நகைமுரண். இங்கு ஒரு அச்சமுற்ற ஒரு சூழல் உருவாக்கியுள்ளது. நீங்கள் அரசிற்கு எதிராக பேசினால் உங்கள் மீது ஒரு முத்திரை குத்தப்படும். பின்னர் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.