பயமில்லாத இறைத்தூதர்

0

பயமில்லாத இறைத்தூதர்

“(இறைதூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறுயாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.” (அல்குர்ஆன் 33:39)

அல்லாஹ்வின் செய்திகளை பரப்புரைச் செய்பவர்கள் தைரியசாலிகளாக இருக்க வேண்டும். பிரபஞ்சத்தின் இறைவனான அல்லாஹ்வின் பிரச்சாரகர்களுக்கு தாங்கள் பரப்புரை செய்வது அல்லாஹ்வின் செய்தி என்ற உணர்வே அவர்களுக்கு மன உறுதியை அதிகரிக்கச் செய்யும். அல்லாஹ்வின் கண்காணிப்பில்தான் அவனது செய்தியை பரப்புரை செய்யும் பிரச்சாரகர்கள் இயங்குகிறார்கள் என்பதை உணரும்போது அவர்களது அர்ப்பண மனப்பான்மை அதிகரிக்கிறது. தாங்கள் பரப்புரை செய்யும் செய்தியின் நம்பகத்தன்மையையும் மகத்துவத்தையும் மனிதகுலம் புரிந்து கொள்ளும்போது அவர்களின் சுயமரியாதை உயரும். மனிதகுலத்திற்கு எதிரான கொள்கைகளின் குறைபாடுகளை புரியும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மரணத்திற்கு பிறகு புதிய ஒரு உலகம் உருவாகும்; அங்கு இவ்வுலகில் செய்த செயல்களுக்கான விசாரணை நடைபெறும்; இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு நிரந்தரமான, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும் என்று நம்பும்போது தன்னைப் போன்ற மனிதர்களுக்கு அந்த செய்தியை கொண்டு சேர்த்தே ஆக வேண்டும் என்ற பேராவல் ஏற்படும். உயிரை தியாகம் செய்வதை அருட்கொடையாக கருதுவதால் எதிரிகளை கண்டு கிஞ்சிற்றும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இவையெல்லாம் சத்தியத்தை பரப்புரை செய்யும் பிரச்சாரகர்கள் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் பயப்படாமல் தொடர்ந்து முன்னோக்கி செல்வதற்கான காரணங்களாகும்.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.