பராமனர்களுக்கு மட்டுமான குடியிருப்பு வழங்குவதாக கூறிய நபர் மோசடி வழக்கில் கைது

0

ஹைதராபாத்திற்கு வெளியே பிராமணர்களுக்கு மட்டுமான குடியிருப்புகளை கட்டித் தருவதாக கூறும் நபர் ஒருவரை மோசடி வழக்கில் காவல்துறை கடந்த செவ்வாய் கிழமை கைது செய்துள்ளது. இவர் பொய்யான நிலங்களை விற்றார் என்றும் ஒரே இடத்தை பலர் பெயரில் பதிவு செய்துள்ளார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் எல்லபிரகட பிரபாகர் ஷர்மா. இவர் தெலுங்கானாவின் கொத்தூர் மண்டலத்தில் உள்ள செகுர் கிராமத்தில் 36 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். பின்னர் ராகவேந்திரா ரியல் எஸ்டேட் என்ற பெயரில் ஓரு நிறுவனம் தொடங்கி “வேத காயத்திரி அக்ரகாரம்” என்ற பிராமணர்களுக்கு மட்டுமான குடியிருப்பு கட்டித் தருவதாக கூறியுள்ளார்.

தனது இந்த அக்ரகார திட்டத்தில் ஒரு சமுதாய நலக் கூடம் மற்றும் திருமண மண்டபம், மாட்டுத் தொழுவம், பள்ளி, பிராமண ஐ.எ.எஸ். பயிற்சி மையம், ஹோமியோபதி, மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை, முதியோர் இல்லம் ஆகியன வர இருப்பதாக அவர் கூறியுள்ளார். தனது இந்த திட்டத்தை அப்பகுதி தொலைகாட்சி சானல்களில் அவர் ஒளிபரப்பியுள்ளார். இவரின் இந்த அக்ரகார திட்டத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள வீட்டுமனைகளை 6 லட்சத்தில் இருந்து 6.5 லட்சங்கள் வரை விலை நிர்ணயித்து, மனை வாங்குபவர்கள் 20% பணத்தை முன்பணமாக தரவேண்டும் என்றும் மீதம் உள்ள தொகை 100தவணைகளில் செலுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இவருக்கு மாதம் 10 இல் இருந்து 12 லட்சங்கள் தவணையாக கிடைத்துள்ளது. ஆனால் இவர் ஒரே மனையை பல பேருக்கு விற்று பல கொடிகளை ஏமாற்றியுள்ளார்.

இவரது 36 ஏக்கர் நிலத்தில் 441 மனைகள் மட்டுமே உள்ளன. ஆனால் இவர் இந்த 441 மனைகளை 936 நபர்களுக்கு விற்று 25.19 கோடிகளுக்கு மேல் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் கூறியது போன்ற வசதிகள் ஏன் இன்னும் கட்டப்படவில்லை என்று அவரின் வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்ப இவரின் இந்த ஏமாற்று வேலை வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது.

இது தொடர்பான் அமுதல் புகார் கொத்தூர் காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணா என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீது இந்திய குற்றப்பிரிவு 410, 406 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுளளன. இவர் தனது மோசடி குற்றத்தினை ஒப்புக் கொண்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிகாரிகள், ஷர்மா அதிக ஜாதிப்பற்றுள்ள பிராமணர்களின் மனோபாவத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் என்று கூறியுள்ளனர். “பிராமணர்களை எல்லாம் ஒன்றிணைத்து உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை பரிசுத்தமான முறையில் வழங்க வேண்டும்” என்று ஷர்மா கூறியதை கேட்டு பிராமணர்கள் அவரது வலையில் விழுந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

ஷர்மாவின் இணையதள பக்கத்தில், “ஒரு பிராமண குடும்பத்தின் உறுப்பினர் என்பதால் சமுதாய மேம்பாட்டிற்காக பிராமணர்கள் தங்களது கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள் என்று அவருக்கு தெரியும். பிராமணர்களை ஒன்றிணைக்கும் வன்னம் பிரபாகர ஷர்மா வேதகாயதிரி அக்ரகாரத்தை துவங்கினார்” என்று கூறப்பட்டுள்ளது.

மகபூப் நகர் காவல்துறையின் கூற்றுப்படி, ஷர்மா தனது வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஏமாற்றியுள்ளார் என்றும் அவர்களிடம் இருந்து பெற்ற பணத்தை வைத்ததுக் கொண்டு ஆடம்பரமான கச்சி பவ்லி பகுதியில் தனக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளார் என்றும் மேலும் அந்த பணத்தில் 11 இரு சக்கர வாகனங்கள், 8 ட்ரக்குகள், 11 பேருந்துகளை வாங்கி போக்குவரத்து தொழிலை துவங்க திட்டமிட்டிருந்தார் என்று கூறியுள்ளனர்.

 

Comments are closed.