பரோலில் விடுதலையாகும் பேரறிவாளன்: தமிழக அரசு உத்தரவு

0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவருடன் கைது செய்யப்பட்டு இந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ஏழு பேருக்கும் தண்டனைக் காலம் முடிவடைந்து விட்டது, ஆயினும் அரசு அவர்களை விடுதலை செய்யவில்லை. இந்நிலையில் பேரறிவாளன்  உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ் தேசிய அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேரறிவாளனுக்கு உடல் நிலை மோசமடைந்து வரும் நிலையில் பல ஆண்டுகளாக பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டி கோரிக்கை வைத்து வந்த அவரது தாயார் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தனது கோரிக்கையை வைத்தார். இந்நிலையில் அவரின் கோரிக்கையை ஏற்று தற்போது பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு மாத காலம் பரோலில் விடுதலையாகும் பேரறிவாளன் 26 ஆண்டுகளுக்குபின் பரோலில் வெளிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.