பர்தாவுக்கு தடை கேட்கும் சிவசேனா! அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு!

0

இந்தியாவில் பர்தா அணிய தடை விதிக்க வேண்டும், என்ற சிவசேனா கட்சி கோரிக்கை வைத்தது. இதற்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால், முகத்தை மூடக்கூடிய ஆடைகள், பர்தா ஆகியவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று, சிவசேனா கட்சி கோரிக்கை வைத்தது. 010இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்துள்ள ஓவைசி கூறியதாவது: அந்தரங்க உரிமைகளை உச்சநீதிமன்ற தீர்ப்பு உயர்த்தி பிடித்துள்ளது. பர்தா அணியும் தனிப்பட்ட உரிமை என்பது இந்தியாவின் அடிப்படை உரிமையாகும். சிவசேனா கட்சி தற்போது இதுகுறித்து பேசிருப்பது, தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்.

எனவே, தேர்தல் ஆணையம், இதை கவனத்தில் எடுக்க வேண்டும். இவர்கள்தான் நமது குழந்தைகள் ஜீன்ஸ் அணிந்ததற்கு அடித்தவர்கள். இப்போது இவர்கள் இப்படி சொல்ல காரணம், வாக்காளர்களை பிரித்தாளும் நோக்கத்தில்தான். இவ்வாறு ஓவைசி தெரிவித்துள்ளார்.

Comments are closed.