பர்தா அணிந்து இஸ்லாமிய பெண்கள் கள்ள ஓட்டு: சர்ச்சையை கிளப்பிய பாஜக வேட்பாளர்!

0

உத்திர பிரதேசம் முசாஃபர் நகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சஞ்சீவ் பல்யான், முஸ்லீம் பெண்கள் பர்தா அணிந்து ஓட்டு போட வந்தபோது கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிந்து வந்து வாக்களிப்பதாகவும், அவர்கள் முகத்தை பார்த்து யாரும் சோதனை செய்து பார்ப்பதில்லை என்றார். அதனால் அவர்கள் கள்ள ஓட்டு போட வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதனை சரிசெய்யாவிட்டால் நான் மறுவாக்குபதிவு நடத்த வலியுறுத்துவேன்” என்றும் தேர்தல் அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது பாஜக வேட்பாளர் சஞ்சீவ் பல்யான் இந்த பேச்சுக்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது

Leave A Reply