பர்தா அணிந்த முஸ்லிம் மாணவியிடம் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூச்சலிட்டு அச்சுறுத்திய இந்துத்துவாக்கள்!

0

மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பெங்கால் மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் உடையணிந்த முஸ்லிம் பெண் ஒருவரை நோக்கி 10 மேற்பட்ட இந்துதுவாவை சேர்ந்தவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூச்சலிட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

இது குறித்து அந்த பெண் கூறியதாவது, “நானும் எனது தோழியும் இரவு உணவு முடித்துவிட்டு 10 மணிக்கு கேண்டீனிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தோம். அப்போது அங்கிருந்த இந்துத்துவவாதிகள் எங்களை நோக்கி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூச்சலிட ஆரம்பித்தனர். உடனே நாங்கள் அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டோம். எங்கள் கல்லூரியில் இதற்கு முன்பு இதுபோன்று நடந்ததில்லை. நான் ஒரு ஹிஜாப் அணியும் முஸ்லிம். இதுபோன்ற தொந்தரவை என் வாழ்க்கையில் இதுவரை சந்தித்ததில்லை” என்று அச்சத்தோடு கூறியுள்ளார்.

Comments are closed.