பலஸ்தீன மக்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கும் இஸ்ரேல்

0

பலஸ்தீன், சுகுர் பஹர் என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடங்களை, எவ்வித அனுமதியும் இன்றி இஸ்ரேலிய ராணுவம் இடித்து தரைமட்டமாக்கியுள்ளது.

இஸ்ரேலிய அரசு, “ஜெருசலம், பலஸ்தீனப் பகுதியில் பாதுகாப்புத் தடைக்கு மிக அருகில் சட்டத்தை மீறி ஆக்கிரமித்துக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால் இடிக்கப்பட்டது. மேலும் கட்டிடங்களை கட்டி அந்த நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிலும் ஈடுப்பட்டு வருவதாக தெரிவித்தது”.

இந்தப் பணியில் 700 இஸ்ரேலிய போலிஸாரும் 200 ராணுவத்தினர் ஈடுப்படுத்தப்பட்டனர். இதுக்குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “பலஸ்தீனிய நிர்வாகம் அளித்த அனுமதியை அடுத்தே தாங்கள் இங்கு வீடுகள் கட்டினோம். ஆனால் இஸ்ரேல், நிலம் முழுவதையும் நாங்கள் ஆக்கிரமிக்கப் பார்ப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்”.

1967ஆம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போரை அடுத்து இஸ்ரேல் வடக்கு கரையை கைப்பற்றியது. பின் கிழக்கு ஜெருசலம் பகுதியை கைப்பற்றியது. சர்வதேச சட்டத்தில், இரண்டு பகுதிகளையும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகவே கருதுகிறது. ஆனால், இஸ்ரேல் இதனை ஏற்க மறுக்கிறது.

Comments are closed.