பள்ளி செல்வோம்

0

பள்ளி செல்வோம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளி செல்வோம்(School Chalo) என்ற கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் இந்திய தேசம் முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் தமிழகத்தில் ஏப்ரல் 13 முதல் ஜூன் 30-வரை இந்த பிரச்சாரம் நடைபெற்றது. துவக்க நிகழ்ச்சி ஏப்ரல் 13-ம் தேதி சென்னையில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணைத் தலைவர் முகம்மது சேக் அன்சாரி ‘பள்ளி செல்வோம்’ பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் முகம்மது ஃபயாஸ், நாகூர் மீரான், சமூக மேம்பாட்டுத்துறை மாநில ஒருங்கிணைப்பாளர் முகம்மது இபுராகிம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறையின் சென்னை தெற்கு மாவட்ட பொருப்பாளர் ஜைனுல் ஆபிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். துவக்க நிகழ்ச்சி நடைபெற்ற அன்று தமிழகம் முழுவதும் 264 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை சென்றடைந்தது.

பள்ளி செல்வோம் பிரச்சாரத்தின் அங்கமாக தன்னார்வ தொண்டர்களுக்கான பயிற்சி முகாம் 7 இடங்களில் நடைபெற்றது. 13 கிராமங்களில் கல்வியை இடைநிறுத்தம் செய்த மாணவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 604 மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.