பழங்குடி இன சிறுமிகளை கடத்தும் ஆர்.எஸ்.எஸ்.

0

அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து 31 பழங்குடியின சிறுமிகளை ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளை அமைப்புகள் கடத்தி வந்துள்ளது என்றும் அந்த சிறுமிகளை குஜராத் மற்றும் பஞ்சாபில் உள்ள தங்களது நிறுவனங்களில்  அடைத்து வைத்து கல்வி என்கிற பெயரில் தங்களது கொள்கைகளை புகுத்தி வருவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மகிலா காங்கிரஸ் அமைப்பின் தலைவர் ஷோபா ஓசா மற்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி இது குறித்து மத்திய அரசும், குஜராத் மற்றும் பஞ்சாப் மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சிறுமிகளை விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் இத்தகைய செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறுமிகள் 3 இல் இருந்து 11 வயது வரை உள்ளவர்கள் ஆவார்கள். இந்த செய்தியை பிரபல ஆங்கில செய்தி நிறுவனமான அவுட்லுக் நிறுவனம் வெளிக்கொண்டு வந்துள்ளது.

20 சிறுமிகளை அடைத்து வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிஷு வித்யாலயா அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குஜராத் அரசிடமும் மீதமுள்ள 11 சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பஞ்சாபின் மாதா குஜாரி கன்யா சற்றவாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி பஞ்சாப் அரசிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறுமிகளை அவர்களின் பெற்றோர்கள் வந்து சந்திக்க அனுமதி வழங்குமாறும் ஆர்.எஸ்.எஸ். இடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த குழந்தைகளை தங்கள் வலைக்குள் விழச் செய்த மூன்று அமைப்புகளாக ராஷ்டிரா சேவிகா சமிதி, வித்யா பாரதி, சேவா பாரதி ஆமிய அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் சைல்ட்லைன் இந்தியா ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பு 31 பழங்குடியின சிறுமிகளை கொக்ராஜார், கோல்பாரா, துப்ரி, சிராங் மற்றும் போங்கைகோன் ஆகிய பகுதிகளில் இருந்து மீட்டுள்ளனர். இந்த சிறுமிகளை ராஷ்டிர சேவிக்க சமிதி அமைப்பின் சேவகர் சந்தியா என்பவர் கடந்த 2015 ஜூன் மாதம் 11 தேதி அழைத்துச் சென்றுள்ளார். மீட்கப்பட்ட இந்த சிறுமிகள் பஹர்கஞ் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால் அரசியல் குறுக்கீட்டு காரணமாக அவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்பட்டனரோ அங்கேயே அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து ஐந்த நாட்கள் பின்னர் அஸ்ஸாம் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு இந்த வழக்கை குழந்தை கடத்தல் என்று கூறியது. மேலும் காவல்துறையினருக்கு இந்த குழந்தைகளை அவர்களின் பெற்றோர் இடத்தில் சேர்க்குமாறு உத்தரவிட்டது. சைல்ட்லைன் அமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் இந்த சிறுமிகள் வைக்கப்பட்டிருந்த பாடியாலா விடுதியில் சென்று பார்வையிட்ட போது அது சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அங்கு உள்ள குழந்தைகள் உடல் ரீதியிலும் மன ரீதியிலும் அப்பகுதி ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் அச்சுறுத்தப்பட்டு வைக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.

Comments are closed.