பஷாருல் ஆஸாதை ஆதரிக்காததால் ஈரான் – ஹமாஸ் உறவு பாதிக்கப்பட்டது – காலித் மிஷால்!

0

தோஹா:2011 -ஆம் ஆண்டு சிரியாவில் புரட்சி துவங்கியபோது பஷாருல் ஆஸாதை ஆதரிக்காத காரணத்தால் ஹமாஸுக்கு ஈரான் அளித்து வந்த உதவியை வாபஸ் பெற்றது என்று ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் விவகார பிரிவு தலைவர் காலித் மிஷால் தெரிவித்துள்ளார்.

தோஹாவில் பிரான்ஸ்-24 தொலைக்காட்சி சானலுக்கு பேட்டி அளித்தபோது இதுக்குறித்து மிஷால் கூறியது:
ஹமாஸிற்கும், சிரியா அதிபர் பஷாருல் ஆஸாதிற்கும் இடையேயான பிரச்சனை ஈரானுடனான உறவை பாதித்தது.ஹமாஸ் அஸதை ஆதரிக்காததால், ஈரான் ஹமாஸிற்கு அளித்து வந்த பொருளாதார உதவியை நிறுத்தியது.முன்பு ஹமாஸின் முக்கிய நன்கொடையாளர்களில் ஒருவராக திகழ்ந்த ஈரான் தற்போது அந்த பட்டியலில் இல்லை.ஈரானுடனான உறவில் முடக்கம் ஏற்பட்ட போதிலும் பூரணமாக உறவு முறியவில்லை.அடிக்கடி ஈரானுக்கு ஹமாஸ் பிரதிநிதிக் குழுக்களை அனுப்பி வருகிறது.
இவ்வாறு மிஷால் தெரிவித்தார்.

Comments are closed.