பாகிஸ்தானியர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை! உ.பி. ஹோட்டல் அறிவிப்பு!

0

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பாகிஸ்தானியர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை என  அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாதில் உள்ள ஹோட்டல் மிலன். இந்த ஹோட்டல் வெளியே ஒரு அறிவிப்பு பலகை ஒட்டப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த ஹோட்டலின் உரிமையாளாரிடம் கேட்ட போது அவர் கூறுகையில், புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்த நோட்டீஸை நாங்கள் வைத்துள்ளோம். பாகிஸ்தான் நாட்டவர் யாரும் இங்கு வரக்கூடாது. புல்வாமா தாக்குதலுக்காக நாங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம் என்றார்.

Comments are closed.