பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்துக் கோவிலை மீண்டும் திறக்க இம்ரான் கான் உத்தரவு!

0

பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்துக் கோவிலை மீண்டும் இந்துக்களுக்காக திறக்க பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநில சியால்கோட் நகரத்தில் கடந்த 72 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்துக் கோவிலுக்கு பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு யாரும் செல்வதில்லை.

ஷவாலா தேஜா சிங் என்றழைக்கப்படும் இந்தக் கோவில் இரு நாட்டுப் பிரிவினையின்போது மூடப்பட்டது. இதனிடையே இந்தக் கோயிலை மீண்டும் திறந்து புனரமைப்பு செய்து இந்துக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்க முடிவுசெய்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

இம்ரான் கானின் இந்த முடிவுக்கு அந்நாடு இந்து மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்தக் கோவிலுக்கு எப்போது வேண்டுமானாலும் இந்துக்கள் பயமின்றி வந்து செல்லலாம் என்று தெரிவித்துள்ளார் துணை கமிஷனர் பிலால் ஹைதர். மேலும், இக்கோவிலை புனரமைப்பு செய்யும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.