பாகிஸ்தானில் தாக்குதலுக்கு உள்ளான பள்ளி மீண்டும் திறப்பு!

0

பெஷாவர்: பாகிஸ்தானில்  தாக்குதலுக்கு உள்ளான பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.

சென்ற மாதம் பாகிஸ்தானின் பெஷாவர் நகர் பள்ளி தாக்குதலுக்கு உள்ளானது. உலகை உலுக்கிய இச்சம்பவத்தில் சுமார் 15 பள்ளிக் குழந்தைகள் பலியானார்கள்.

இந்த நிலையில் இப்பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுடன் பள்ளிக்கூடம் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த இராணுவத் தலைமை அதிகாரியான ஜெனரல் ரஹீல் ஷரீஃப், பள்ளிப் பிள்ளைகளை பாதுகாக்க அதிகாரிகள் இயன்ற அனைத்தையும் செய்வார்கள் என்று உறுதியளித்தார்.

பெஷாவர் நகர் பள்ளி தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் பல பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அவை அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன.

Comments are closed.