பாகிஸ்தானில் பழம்பெரும் பள்ளிவாசல் அருகே குண்டுவெடிப்பு!

0

பாகிஸ்தான் தாதா தர்பார் பள்ளிவாசல் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்காசியாவில் மிகவும் பழைமையான பள்ளிவாசல்களில் ஒன்றான தாதா தர்பார் பள்ளிவாசல் , பாகிஸ்தானின் லாகூர் நகரில் அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வருவர். தற்போது ரமலான் நோன்பு மாதம் என்பதால் அப்பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் இன்று காலை லாகூரின் தாதா தர்பார் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 போலீஸ் வாகனங்களில் குண்டுவெடித்தது.

இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 2010ஆம் ஆண்டு அப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.