பாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்

0

ஹைதராபாத்தில் உள்ள கோஷமகால் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ தாகூர் ராஜ் சிங் லோத், ராம நவமியை முன்னிட்டு தேசப்பற்று பாடல் வெளியிடப் போவதாக அறிவித்தார். அதனையடுத்து சமூக வலைதளங்களில் வெளியான பாடலை இந்திய பாதுகாப்பு படைகளுக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் தினத்திற்காக தாங்கள் உருவாக்கிய பாடலை இந்தியா காப்பியடித்ததாக அந்நாட்டின் ராணுவ செய்தித்தொடர்பாளர் அசிஃப் கஃபூர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் “நீங்கள் காப்பியடித்தது மகிழ்ச்சி, அதே போல எங்களிடமிருந்து உண்மை பேசவும் காப்பியடியுங்கள்” என்று தெரிவித்தார். தாகூர் ராஜ் “சிந்தாபாத் பாகிஸ்தான்” என்ற பாடலை “சிந்தாபாத் இந்தியா” என்று மாற்றி அதனை இந்திய பாதுகாப்பு படைகளுக்காக பாடியுள்ளார்.

Comments are closed.