பாகிஸ்தானை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் குண்டுவெடிப்பு!

0

ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்று காலை பாகிஸ்தான், லாகூரில் தாதா தர்பார் மசூதிக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த காரில் குண்டுவெடிப்பு தாக்குதலில் 3 பேர் பலியாகினர்.

இதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளது. காபூலில் உள்ள ஷார் நாவ் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருக்கிறது. மேலும் காயம் அடைந்தவர்கள் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது ரமலான் மாதம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் நோன்பு நோற்று வருகிறார்கள். இந்த நிலையில் இந்த மோசமான தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

Comments are closed.