பாகிஸ்தான் சிறையிலுள்ள இந்தியக் கைதிகளின் விவரம் இந்திய தூதரகத்திடம் ஒப்படைப்பு

0

பாகிஸ்தான் சிறையில் உள்ள 261 இந்திய கைதிகளின் பட்டியலை பாகிஸ்தான் அரசு இந்திய தூதரகத்திடம் வழங்கி உள்ளது.

இரு நாட்டு சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்வதுத் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகள் இடையே ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனை அடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம், பாகிஸ்தான் அரசு, தங்களது சிறைகளில் உள்ள இந்திய சிறைக் கைதிகளின் பட்டியலை வழங்கியுள்ளது. அதில் 52 பொதுமக்கள், 209 மீனவர்கள் என மொத்தம் 261 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

ஆகையால் தற்போது, இந்தியச் சிறையில் உள்ள பாகிஸ்தான் கைதிகளின் பட்டியலையும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் இந்தியா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.