பாகிஸ்தான் போர் விமானத்தை இந்தியா வீழ்த்தவில்லை! அமெரிக்க அறிவிப்பு

0

பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறியது. ஆனால் இந்த விமானம் பத்திரமாக இருப்பதாக அமெரிக்க நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் எப்16 போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக இந்திய பாதுகாப்புத்துறை கூறி வந்தது.

தீவிரவாத ஒழிப்பு பணிக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய எப்-16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை பயன்படுத்தியது. அதை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த கூடாது என நிபந்தனையும் விதித்திருந்தது அமெரிக்கா. ஆனால், எப்16 விமானத்தை பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியதாகவும், அதை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும் இந்தியா அறிவித்தது அமெரிக்காவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அமெரிக்க பாதுகாப்புத் துறையின் 2 மூத்த அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு சென்று நேரில் ஆய்வு நடத்தியுள்ளனர். அதில், பாகிஸ்தானிடம் தாங்கள் வழங்கிய எப்16 விமானங்கள் அனைத்தும் பத்திரமாக இருப்பதாகவும், ஒன்றுமே குறையவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Comments are closed.