பாகிஸ்தான் மீது போர் வெறி பிடித்த அலையும் பாஜக! மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்!

0

பாகிஸ்தான் மீது இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்று எங்களுக்கு நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, ஏப்ரல் 16ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதிக்குள் தாக்குதல் நடைபெறலாம்.

ஆளும் பா.ஜ.க அரசு போர் வெறி பிடித்து அலைகிறது. இதுகுறித்து ஊடகங்களில் பேசுவதற்கு பிரதமர் இம்ரான் கான் அனுமதி அளித்துள்ளார்’ என்று தெரிவித்தார். இதுதொடர்பாக, ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Comments are closed.