பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாஸி கைது

0

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் கைது செய்யட்டதை அடுத்து இடைக்கால பிரதமராக அப்பாசி பதவி வகித்தார்.

நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்த போது பெட்ரோலியத் துறை அமைச்சராக பதவி வகித்த அப்பாஸி கத்தாருடனான எரிவாயு இறக்குமதி ஒப்பந்தத்தில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அப்பாஸி லாகூரில் பத்திரிகையாளர்களை சந்திக்க காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை தேசிய பொறுப்புடைமை முகமை (ஊழல் தடுப்பு) அதிகாரிகள் கைது செய்தனர். இதற்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித்தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் இம்ரான் கான் அரசு சிறையில் அடைக்க விரும்புவதாக குற்றம்சாட்டினார். 

Comments are closed.