பாகிஸ்தான் வான்வெளியில் மோடி விமானம் பறக்க ஒப்புதல் அளித்த இம்ரான் கான்

0

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் அரசு அந்நாட்டு வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விததித்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசின் சார்பில் இம்ரான் கான் அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதைப் பரிசீலித்த பாகிஸ்தான் அரசு, மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இதை பாகிஸ்தான் அதிகாரி நேற்று உறுதி செய்தார்.

Comments are closed.