பாசிசத்திற்கு விடை கொடுப்போம்

0

பாசிசத்திற்கு விடை கொடுப்போம்

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா& எஸ்டிபிஐ கட்சி 2009ஆம் ஆண்டு இந்த நாட்டு மக்களுக்காக ‘பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை’ என்ற முழக்கத்தோடு, தேர்தல் அரசியலிலும் போராட்ட அரசியலிலும் வீரியத்தோடு களமிறங்கக் கூடிய தேசிய அளவிலான ஒரு அரசியல் கட்சியாக அர்ப்பணிக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகத்தினர், தலித்கள் மற்றும் புறக்கணிக்கப்படும் அனைத்து  சமூக மக்களுக்காக எஸ்.டி.பி.ஐ. கட்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை குரல் எழுப்பி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கான உரிமைகளையும் நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம்.

பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், மணிப்பூர், கோவா, ராஜஸ்தான், பீகார், அஸ்ஸாம், டெல்லி உள்ளிட்ட நாட்டின் 18 மாநிலங்களில் வியாபித்து பரவி இருக்கின்றது. அரசியலை வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க பொதுநலன் நோக்கோடு செயல்படுகின்ற அரசியல் கட்சியாக, கொள்கை அடிப்படையில் எஸ்.டி.பி.ஐ. வளர்ந்து வருகிறது.

குறிப்பாக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார எதிர்ப்பு, கார்ப்பரேட் எதிர்ப்பு, அரச பயங்கரவாத எதிர்ப்பு, சிறுபான்மை மக்கள் பாதுகாப்பு, விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறைக்கான கோரிக்கை என பல்வேறு தளங்களிலே களம் காண்கிறோம்.

கூடன்குளம் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், காவிரி பிரச்சனை, அன்டை நாடான இலங்கையில் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம், ஃபலஸ்தீனில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலை, உயர் ஜாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத் திருத்தத்தை எதிர்ப்பது என போராட்ட களத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நாட்டிற்கு ஒரு முன்மாதிரி பேரியக்கமாக மாறி உள்ளது. நாட்டை பாதிக்கும் அனைத்து விவகாரங்களுக்கு எதிராக மக்களோடு மக்களாக நின்று எஸ்.டி.பி.ஐ. கட்சி பங்காற்றி வருகிறது. பாசிச, சனாதன சிந்தனை கொண்ட பா.ஜ.க. அரசின் கொடுமைகளை எதிர்ப்பதில் ஒருவித அச்சம் நிலவி வந்த நிலையில், மத்திய பா.ஜ.க. அரசின் ஒவ்வொரு தோல்வியையும் அவர்களின் பிரிவினை அரசியலையும் மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டுவதில் முதன்மையான கட்சியாக எஸ்.டி.பி.ஐ. திகழ்கிறது. சிறுபான்மை மக்களின் உள்ளத்தில் என்றென்றும் மாறாமல் நிலைத்து நிற்கின்ற பாபரி பள்ளிவாசல் இடிப்பை ஒருபோதும் நாம் மறக்க மாட்டோம் என்ற கருத்தை மக்களிடம் கொண்டு செல்கின்ற கட்சியாக இருக்கிறது. … <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.