பாசிசம் மாய்ப்போம்! ஜனநாயகம் காப்போம்!

0

பாசிசம் மாய்ப்போம்! ஜனநாயகம் காப்போம்!

நமது தேசத்தின் 71வது குடியரசு தினம் ஜனவரி 26 அன்று புது உத்வேகத்துடனும் எழுச்சியுடனும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அரசு சார்பாக நடத்தப்பட்ட கொண்டாட்டங்களை விட இம்முறை மக்கள் மன்றத்தில் நடத்தப்பட்ட கொண்டாட்டங்களே கவனத்தை ஈர்த்தன. கொடியேற்றம், இனிப்பு வழங்குதல் என வழக்கமான நடைமுறைகளுடன் இம்முறை நமது அரசியல் சாசனத்தின் முகப்புரையை பெரும்பான்மை மக்கள் வாசித்து குடியரசை பாதுகாக்கும் உறுதி மொழியை ஏற்றனர். பொதுவாக சுதந்திர தினத்தை கொண்டாடுவது பொதுமக்களின் இயல்பு. ஆனால் இம்முறை அவர்களுக்கு குடியரசின் முக்கியத்துவத்தை மத்திய பாரதிய ஜனதா கட்சியின் மூர்க்கத்தனமான, முட்டாள்தனமான செயல்பாடுகள் உணர்த்தியுள்ளன.

சுதந்திரமடைந்த நமது தேசம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. பரந்த நிலப்பரப்பை கொண்ட நமது நாடு, பல்வேறு மொழிகள், மதங்கள், இனங்கள், கலாசாரங்களை கொண்ட மக்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்தியா ஒரு ஜனநாயகமாக, சவால்களை எதிர்கொள்ளும் தேசமாக வளருமா என்ற கேள்வியை சிலர் அக்கறையுடனும் பலர் ஏளனத்துடனும் எழுப்பினர். ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற இந்தியா, சில வருடங்கள் கூட அந்த சுதந்திரத்தை தக்க வைக்காது என்றே பலரும் நம்பினர். விரும்பினர் என்று கூட கூறலாம். இந்த சூழலில்தான் நமது நாட்டிற்கான அரசியல் சாசனத்தை உருவாக்கும் மிகப்பெரும் பணியை நமது தலைவர்கள் மேற்கொண்டனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.