பாஜகவினரிடம் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை இரவு பகலாக பாதுகாக்கும் எதிர்கட்சியினர்!

0

உத்திர பிரதேசம் உட்பட வட மாநிலங்களில் பாஜகவினர் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகியது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக பல எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது.

7 கட்டங்களாக நடைபெற்று வந்த தேர்தல் பதிவான வாக்குகள், நாளை எண்ணப்படும் நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வெளியிலேயே இரவு பகலாக அமர்ந்து எதிர்க்கட்சியினர் கண்காணித்து வருகின்றனர். மத்தியப்பிரதேசம், சண்டிகர், மும்பை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன் தினம் இரவிலிருந்தே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாத்து வருகின்றனர்.

Comments are closed.