பாஜகவின் தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் ஆதரவு பாரதிய மஸ்தூர் சங் பேரணி

0

பாஜக அரசின் தொழிலாளர் எதிர்ப்பு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்எஸ்எஸ் ஆதரவு தொழிலாளர் அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம் டெல்லியில் கடந்த வெள்ளி பேரணி ஒன்றை நடத்தியுள்ளது.

இந்த பேரணியில் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் முக்கியமாக ஒபந்த பணியாளர் அமைப்பை ஒழிப்பது, சம வேலைக்கு சம ஊதியம், MNREGS திட்டத்தின் கீழ் உள்ள 100 நாள் வேலையை 200 நாள் வேலையாக அதிகப்படுத்துதல், அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வது, ஏழாவது திட்ட கமிஷனில் உள்ள சில குறைகளை நீக்கி தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூபாய் 24,000 ஆக நிர்ணயிப்பது ஆகிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

இந்த பேரணியில் பங்கேடுத்தவர்களிடம் உரையாற்றிய பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தேசிய தலைவர் சாஜி நாராயணன், தங்களின் இந்த பேரணியை அடுத்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர், தேசம் விடுதலையாகி 70 வருடங்கள் ஆகியும் தொழிலாளர் நலனுக்கு எந்த அரசும் இதுவரை எதுவும் செய்யவில்லை என்றும் அம்பேத்கர் இயற்றிய சட்டங்களை உடைக்க எவருக்கும் உரிமையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மோடியின் பல நல்ல எண்ணங்கள் மற்றும் முயற்ச்சிகள், தவறான அறிவுரை கூறுபவர்களாலும், மோசமான அதிகாரிகளாலும், முறையான நிபுணர்கள் இல்லாத காரணத்தினாலும் செயலிழந்து போகின்றன என்று அவர் முன்னர் தெரிவித்திருந்தார்.

Comments are closed.