பாஜகவில் அரசியலுக்கே முதலிடம்: இந்திய வீரர் பாகிஸ்தான் வசமிருக்க அரசியல் மாநாட்டில் பங்கெடுக்கிறார் மோடி?

0

பாஜகவில் அரசியலுக்கே முதலிடம்: இந்திய வீரர் பாகிஸ்தான் வசமிருக்க அரசியல் மாநாட்டில் பங்கெடுக்கிறார் மோடி?

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா விமானப்படை துல்லியத்தாக்குதல் நடத்தியதாகவும் அதில் 300 இல் இருந்து 500 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பல ஊடகங்கள் செய்திகளை வெளியீட்டன. இந்நிலையில், பாகிஸ்தான் வான்வெளியில் பரந்த இரு இந்திய விமானப்படை விமானங்களை பாகிஸ்தான் இராணுவம் சுட்டதாகவும் அத்துடன் இந்திய விமானப்படை வீரர் ஒருவர் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றார் என்று பாகிஸ்தான் அரசு செய்தி வெளியிட்டது.

இதன் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பட்ட நிலையில், இந்திய வீரரின் வீடியோவையும் பாகிஸ்தான் அரசு வெளியிட்டது. பாகிஸ்தான் வசம் உள்ள இந்திய வீரர் அபினந்தன் உள்ளார் என்று இந்தியா அரசு பின்னர் உறுதிப்படுத்திய நிலையில் இந்தியா முழுவதும் அந்த வீரரின் நலனுக்கு மக்கள் கவலைப் பட்டு கொண்டுள்ளனர்.

ஆனால் பாஜகவினரின் செயல்பாடோ வேறுவிதமாக உள்ளது. நாளை மாபெரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாஜக நிகழ்ச்சியில் மோடி பேசுவார் என்று பாஜக விளம்பரம் செய்து வருகின்றது. இந்திய விமானப்படை வீரர் பாக்கிஸ்தானில் சிக்கியுள்ளதை இந்திய அரசு ஒப்புக்கொண்ட பொழுது இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிலாஸ்பூரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். இந்திய பிரதமர் மோடி விளையாட்டுதுறை அமைச்சருடன் மொபைல் ஆப் வெளியிட்டார். இத்துடன் நில்லாமல் நாளை உலகின் மிகப் பிரமாண்டமான வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சியில் மோடி பேசுவார் என்று பாஜக விளம்பரம் செய்து வருகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக இராணுவம் பாகிஸ்தான் மீது நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு வீதிகளில் மோடிக்கு நன்றி சொல்லி பதாகைகள் வைத்து பாஜக வாக்கு சேகரித்து வருகிறது.

Comments are closed.