பாஜகவில் இணைந்த கவுதம் கம்பீர் மீது க்ரிமினல் வழக்கு!

0

மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் அதீஷி, கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான முன்னால் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இரண்டு தனித்தனி வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பதாக புகார் அளித்துள்ளார்.

கவுதம் கம்பீர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி பாஜக கட்சியில் இணைந்தார். டெல்லி கிழக்கு தொகுதியின் பாஜக வேட்பளாராக கவுதம் கம்பீரை பாஜக தலைமை அறிவித்தது.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் மீது ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதீஷி புகார் அளித்துள்ளார். அதில் கவுதம் கம்பீர் இரண்டு தனித்தனி வாக்காளர் அட்டைகள் வைத்துள்ளார். ஒன்று டெல்லி கரோல் பாக் மற்றும் மற்றொன்று ராஜேந்தர் நகர் ஆகிய இரண்டு இடங்களில் வாக்களர் பட்டியலில் பெயர் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

மேலும் அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளார். பிரிவு எண் 17 மற்றும் பிரிவு எண் 31 சட்டப்படி இரண்டு வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்க வழியுண்டு எனவும் கூறியுள்ளார்.

Comments are closed.