பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய தயாராகும் 100க்கும் மேற்பட்ட இயக்குநர்கள்

0

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று 100க்கும் மேற்பட்ட இயக்குநர்கள் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளானர்.

இதில் வெற்றி மாறன், ஆனந்த் பட்வர்தன், சானல்மார் சாசிதரன், சூடவன், தீபா தர்ராஜ், குர்விந்தர் சிங், புஷ்பேந்திர சிங், கபீர் சிங் சௌத்ரி, அஞ்சலி மான்டிரோ, பிரவீன் மொர்ச்சல், தேவஷிஷ் மகிஜா மற்றும் பினா பால் போன்ற நன்கு அறியப்பட்ட பெயர்கள் அடங்கும்.

இது தொடர்பாக www.artistuniteindia.com என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிடப்பட்டது.

மற்றவர்கள் மத்தியில் வெறுப்பு அரசியலை வெளிப்படுத்துதல், தலித்துகளை ஓரங்கட்டுதல், முஸ்லிம்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுதல், கலாச்சார மற்றும் அறிவியல் நிறுவனங்களின் கடுமையான சுரண்டுதல் போன்ற காரணங்களுக்காக பாஜகவை எதிர்ப்பதாக இயக்குநர்கள் தெரிவித்தனர்.

“கலாச்சார ரீதியாக நாங்கள் வேறுபட்டிருந்தாலும், எப்போதும் ஒற்றுமையாக இருக்கிறோம். இது இந்த அற்புதமான நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமனுக்கும் உள்ள ஒரு பெரும் உணர்வாகும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

”2014 ஆம் ஆண்டு பாஜக அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து நாடு மத ரீதியாக துருவப்படுத்தப்பட்டுவிட்டது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் புத்திசாலித்தனமாக தேர்வு செய்யவில்லை என்றால் மீண்டும் பாசிசம் நம்மை கடுமையாக பாதிக்கும்.

பாஜக மற்றும் அதன் கூடட்டணிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் தவறிவிட்டனர். “அவர்கள் இப்போது கும்பல் வன்முறை மற்றும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டை வகுப்புரீதியாக பிரிக்கின்றனர்.

சிறுபான்மையினருக்கு ஆதரவாக எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ  குரல் எழுப்பினால் அதை ‘தேச விரோதம்’ என்று அவர்கள் பெயரிடுகிறார்கள். போரில் ஈடுபட்டு நாட்டை ஆபத்திற்குள்ளாக்குவதும், சுரண்டுவதுமே இவர்களது ஆட்சயில் உள்ளது” என்றும் அந்த அறிக்கையில் இயக்குநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Comments are closed.