பாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்!

0

உத்தரப் பிரதேசத்தில தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததால், ஆத்திரமடைந்த இளைஞர் தனது விரலை வெட்டிக் கொண்டார்.

புலஷந்தர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஷிகர்பூர் பகுதையைச் சேர்ந்தவர் பவண் குமார் சமாஜ் கட்சியின் தொண்டரான இவர், கவனக்குறைவு காரணமாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக தாமரை சின்னத்தில் வாக்களித்துவிட்டார்.  தனது செயலால் வருத்தமடைந்த பவண் குமார், வீட்டுக்கு வந்து தனது விரலை தானே துண்டித்துக் கொண்டார். இதுதொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டதும், அது வைரலாகி வருகிறது.

Comments are closed.