பாஜகவை சேர்ந்த பெண்ணை ஏமாற்றி கற்பழித்த ஆர்எஸ்எஸ் தலைவர் கைது

0

பாஜகவை சேர்ந்த பெண்ணை ஏமாற்றி கற்பழித்த ஆர்எஸ்எஸ் தலைவர் கைது

வங்காள பாஜக வின் முன்னாள் பொதுச் செயலாளரும், தற்போதைய ஆர்எஸ்எஸ் அகில் பாரதிய கிரகக் பஞ்சாயத்தின் உறுப்பினருமான அமலேந்து சட்டோபத்யாய் என்பவர் பாஜகவைச் சேர்ந்த பெண ஒருவரை ஏமாற்றி கற்பழித்த வழக்கில் கல்கத்தா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி பெகாலா காவல் நிலையத்தில் சட்டோபத்யாய் மீது ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படியில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பாஜகவை சேர்ந்த அப்பெண் தனது புகாரில், பாஜக வை சேர்ந்த இரு தலைவர்கள் தன்னை சந்திப்பு ஒன்றிற்காக மத்திய கல்கத்தாவில் உள்ள ஒரு விடுத்திக்கு அழைத்ததாகவும் ஆனால் அங்கு சென்றதும் அங்கே ஷிவபிரகாஷ் மற்றும் முகர்ஜீ ஆகியோர் மாடும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த விடுதியில் வைத்து ஷிவப்ரகாஷ் மற்றும் முகர்ஜீ தன்னை கற்பழிக்க முயன்றதாகவும் அப்போது அங்கு வந்த சட்டோபத்யாய் அவ்விருவரிடம் இருந்து தன்னை காப்பாற்றியதாக தெரிவித்த அவர் இந்த சம்பவம் குறித்த செய்த வெளியே கசிந்தால் தங்களது கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் அதுகுறித்து யாரிடமும் எதுவும் தெரிவிக்க வேண்டாம் என்று சட்டோபத்யாய் தன்னிடம் கூறியதாக தன் புகாரில் தெரிவித்துள்ளார்.

பின்னர் தன்னை தனது வீட்டில் அடிக்கடி சந்தித்த சட்டோபத்யாய் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி கற்பழித்தாகவும் அத்துடன் தன்னை அவர் சித்திரவதை செய்து இதனை வெளியில் கூறினால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இவர் அளித்த இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், சட்டோபத்யாய், பாஜக வின் ஷிவபிரகாஷ் மற்றும் ஆர்எஸ்எஸ் இன் பித்யுத் முகர்ஜீயின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புது டில்லியில் நடக்கவிருந்த மூன்று நாள் ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்குகொள்ள வந்த சட்டோபத்யாயை கல்த்தா காவல்துறை கைது செய்துள்ளனர். இந்த கைது குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை, “அவர் திருமணம் செய்வதாக போலியான வாக்குறுதி அளித்து பெண் ஒருவரை ஏமாற்றி கற்பழித்துள்ளார். இந்தக் குற்றத்துடன் கற்பழிப்பு, மோசடி, நம்பிக்கை மோசடி, ஒரு பெண்ணை கருகலைக்க நிற்பந்தித்தல் மற்றும் கிரிமினல் சதித்திட்டம் ஆகிய குற்றங்கள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

இந்த கைது குறித்து கருத்து தெரிவித்த வங்காள பாஜக வின் தலைவர் திலீப் கோஷ், “இதனை எதிர்த்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் எங்களது வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.